திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2024 (08:03 IST)

முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை பயணம்.. கொழும்புவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு..!

முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை பயணம் பயணம் செய்யவிருப்பதாகவும், அவர்களை  இலங்கை விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்புவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுதலையான நிலையில் அவர்களில் முருகன் உள்பட மூன்று பேர் இன்று விமான மூலம் இலங்கை செல்கின்றனர்

திருச்சி சிறப்பு முகாமிலிருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் காவல்துறை வாகனம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.  நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை வருகை தந்தை நிலையில் இன்று அவர்கள் மூவரும் இலங்கை செல்லவுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன் உள்பட 3 பேரும் இன்று காலை 10 மணிக்கு இலங்கை விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்புவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்’ என்று கூறினார்.

Edited by Siva