சிறையில் இருந்து விடுதலையான முருகன் - சாந்தன்: எங்கே செல்கிறார்கள்?
சிறையில் இருந்து விடுதலையான முருகன் - சாந்தன்: எங்கே செல்கிறார்கள்?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை வகித்த பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது
இந்த நிலையில் இந்த உத்தரவின் அடிப்படையில் வேலூர் சிறையில் இருந்த முருகன் மற்றும் சாந்தன் விடுதலை செய்யப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து 31 ஆண்டுகள் சிறையில் இருந்த முருகன் சாந்தன் விடுதலை ஆனவுடன் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமுக்கு அழைத்துச் செல்ல படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அதேபோல் மீதமுள்ளவர்களும் சிறை பார்மாலிட்டி முடிந்தவுடன் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கணவன் மனைவியான முருகன் நளினி விரைவில் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran