Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முடிவுக்கு வந்தது சிக்கல் - அகிலேஷ் யாதவ் இடைநீக்கம் ரத்து

சனி, 31 டிசம்பர் 2016 (15:34 IST)

Widgets Magazine

உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக, அவரின் தந்தையும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் அறிவித்துள்ளார்.


 

 
உத்திரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் ஆகியோர் இடையே கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நிகழ்ந்து வந்தது. 
 
இந்நிலையில், அடுத்த வருடம்  நடக்கவுள்ள  உத்திரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், அகிலேஷ் யாதவ் ஆதரவு பெற்றவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்த விவகாரம் அகிலேஷ்-முலாயம் சிங் ஆகியோருக்கிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது.
 
எனவே, அகிலேஷ் யாதவ் தனியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தார். எனவே, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாலும், கட்சி விரோத போக்கை கடைபிடித்ததாக கூறி அவரையும் அவரது சோகதரர் ராம்கோபால் யாதவையும் 6 வருடங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முலாயம் சிங் யாதவ் நேற்று உத்தரவிட்டார்.
 
மொத்தம் உள்ள 229 சமாஜ்வாடி எம்.எல்.ஏக்களில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து தனது பலத்தை காட்ட தனது வீட்டில் அவர் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டினார்.  இந்த கூட்டத்தில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என முலாயம் சிங் எச்சரித்தும் அனைவரும் கலந்து  கொண்டனர்.
 
இந்த கூட்டம் முடிந்த பின் அகிலேஷ் யாதவ் தனது தந்தையை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அகிலேஷ் மற்றும் ராம்கோபால் மீதான சஸ்பெண்டை நீக்கம் செய்து முலாயம் சிங் உத்தரவிட்டார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜெயலலிதாவின் தோழி சசிகலா; சசிகலாவிற்கு தோழி யார் தெரியுமா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் தலைமை பொறுப்பான பொதுச்செயலாளர் ...

news

சசிகலாவின் காலில் விழுந்த ‘முதல்வர்’ பன்னீர்செல்வம்!

அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ...

news

சசிகலாவிற்கு எதிர்ப்பு; ஜெ. நினைவிடத்தில் விஷம் அருந்திய அதிமுக தொண்டர்

அதிமுக பொதுச்செயலாளராக ஜெ.வின் தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றதை தாங்கிக் கொள்ள முடியாத ஒரு ...

news

எனக்கு எல்லாமும் அம்மாதான் ; என் சோகத்தை விவரிக்க முடியாது : வி.கே. சசிகலா கண்ணீர் உரை

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா, அவரின் பதவியை ஏற்றுக்கொள்ள ...

Widgets Magazine Widgets Magazine