1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (11:49 IST)

எம்.பி திருமா மிஸ்ஸிங்... திமுக போராட்டத்தில் பங்கேற்காதது ஏன்?

நேற்று டெல்லியில் காஷ்மீர் விவகராத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய திமுக எம்.பி-களுடன் திருமாவளவன் ஏன் கலந்துக்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
மத்தியில் ஆளும் பாஜக யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அதோடு, ஜம்மு காஷ்மீர் சட்டசபை உள்ள யூனியம் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியம் பிரதேசமாகவும் செயல்படும் என அறிவித்தது. 
 
இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக தனது நிலையான எதிர்ப்பை வெளிப்படுத்தியது. எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு பகுதியாக டெல்லியில் திமுக எம்.பி-கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் ஆகியோர் போராட்டம் நடத்தினர். 
இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவலவன் பங்கேற்கவில்லை. இது குறித்து அவரிடம் கேட்ட போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் என்னால் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தார். 
 
அப்படி என்ன காரணம் என அளசிய போது, நேற்றுதான்  திருமாவளவனுக்கு பிஎச்டி பட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கியுள்ளார். 
ஆம், நெல்லை பல்கலைக்கழக குற்றவியல் மற்றும் குற்ற நீதித்துறையில் ‘மீனாட்சிபுரம் மதமாற்றம்'' தொடர்பாக ஆய்வு செய்து தனது ஆய்வுக் கட்டுரையை திருமாவளவன் சமர்ப்பித்தார். இதற்காக அவருக்கு பிஎச்டி பட்டம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.