1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (08:27 IST)

15 நாள் குழந்தையை பேருந்து நிலையத்தில் போட்டுவிட்டு சென்ற கொடூர தாய்: திருப்பூரில் அதிர்ச்சி..!

பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை திருப்பூர் பேருந்து நிலையத்தில் கொடூர தாய் ஒருவர் தவிக்க விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்து 15 முதல் 20 நாட்கள் ஆன ஆண் குழந்தையை பெண் ஒருவர் தனது அருகில் நின்று கொண்டிருந்த பெண் பயணியிடம் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், கழிப்பறை சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண், குழந்தையை வாங்க வராததால் சந்தேகம் அடைந்த குழந்தை வைத்திருந்த பெண் அருகில் இருந்த காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 
 
காவல்துறையினர் உடனடியாக அந்த குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை தனியாக தவிக்க விட்டு விட்டு மாயமான பெண் கொடுத்து விசாரணை நடந்து வருவதாகவும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த பெண்ணை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் அந்த பெண் குறித்த தகவல்கள் தெரியவரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva