செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (20:42 IST)

மகள் சீரழிந்தது தெரியாமல் நாடகத்தில் மூழ்கிய தாய் ! பதறவைக்கும் சம்பவம்

திருச்சி மாவட்டத்தில் முசிறி அருகே உள்ள கிராமத்தில்  பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.  இவருக்கு 7 வயதில்  ஒரு பெண்குழந்தை இருக்கிறாள். 
இந்த கிராமத்தில் மழை பெய்ய வேண்டி அர்ஜீனன்  தவசு என்ற நாடகம் நடத்தப்பட்டு வருகிறது.  இது 3 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுவதால் 2 நாட்கள் தொடர்ச்சியாக நாடகம் பார்த்த தாய் 3 வது நாளிலும் நாடகம்  பார்க்க வேண்டும் என ஆசை கொண்டார். இதனையடுத்து  வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை வீட்டு வாசலில் உட்கார வைத்துவிட்டு நாடகம் பார்க்க சென்று விட்டார்.
 
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் இருந்த மகள் அழுது கொண்டே, நாடகம் பார்க்கும் தாயை தேடி வந்துள்ளார். அப்போது அவளின் உடை எல்லாம் ரத்தம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய், மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் , சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ந்த தாய், முசிறி காவல்நிலையத்தி புகார் அளித்தார். 
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தற்போது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.