1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:38 IST)

ஒரே வார்டில் தாய்-மகள் எதிரெதிராக போட்டி!

ஒரே வார்டில் தாய்-மகள் எதிரெதிராக போட்டி!
ஒரே வார்டில் தாய்-மகள் எதிரெதிராக போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் 18வது வார்டில் அதிமுகவை சேர்ந்த  பிரியா தினகரன் என்பவர் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்
 
இதனை அடுத்து அவருக்கு போட்டியாக அவருடைய தாய் கோட்டீஸ்வரி என்பவர் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்
 
ஒரே வார்டில் தாய் மற்றும் மகள் போட்டியிடுகின்றனர் என்பதும் அதில் ஒருவர் அதிமுக சார்பிலும் ஒருவர் சுயேட்சை சார்பிலும் போட்டியிடுவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது