செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (18:04 IST)

17ஆம் தேதி சொந்த ஊருக்கு கிளம்பி விடுங்கள்.. தேர்தலுக்காக 10,000க்கு மேல் சிறப்பு பேருந்துகள்..!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தென் மாவட்டத்தில் உள்ள ஏராளமான மக்கள் சென்னையில் இருப்பதை அடுத்து தேர்தலுக்கு ஓட்டு போட அவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக ஏப்ரல் 17, 18 ஆம் தேதிகளில் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் 16, 17 ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்ள போக்குவரத்து துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தலை ஒட்டி இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அதற்காக முன் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் உள்ள ஏராளமான பொதுமக்களுக்கு தங்களது சொந்த ஊரில் தான் வாக்குகள் இருக்கிறது என்பதால் அவர்கள் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் தேர்தலுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran