Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜல்லிக்கட்டுக்காக போராடிய மணவர்களுக்கு நினைவுச் சின்னம்..

செவ்வாய், 31 ஜனவரி 2017 (11:28 IST)

Widgets Magazine

ஜல்லிகட்டுக்காக போராடிய மாணவர்களுக்காக கோவையில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


 

 
ஜல்லிக்கட்டு வேண்டி சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். அதன்பின் அவர்களோடு பொதுமக்களும் இணைந்து போராடினார். அதனால், வேறு வழியின்றி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தற்போது அந்த சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.
 
எந்த தலைமையும் இல்லாமல், சமூக வலைத்தளங்கள்  மூலமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஒன்று கூடி இரவு, பகல் பாராமல் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பெண்கள் கூட மெரினாவில் பாதுகாப்பாக இரவில் தங்கினர். 
 
உலகமே வியக்கும் வண்ணம் தமிழக மாணவர்களின் போராட்டம் திகழ்ந்தது. எனவே அதை நினைவுப்படுத்தும் விதமாக, கோவை வ.உ.சி பூங்காவில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
கோவையில் இந்த பூங்காவில்தான் ஆயிரக்கணக்கானோர் கூடி ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடினார்கள் என்பதும், போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மூன்றாம் உலக போர் எச்சரிக்கை: கலக்கத்தில் உலக நாடுகள்!!

அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலக ...

news

தமிழக அவசர சட்டம் செல்லுமா? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட ...

news

சசிகலாவுக்காக ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றியமைக்கப்பட்டதா?

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் புரட்சி வெடித்தது. ...

news

பட்ஜெட் கூட்டத்தொடர்: பணமதிப்பிழப்பிற்கான நடவடிக்கை என்ன??

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2017 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ...

Widgets Magazine Widgets Magazine