1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 மே 2023 (11:20 IST)

சலுகை கட்டணத்தில் மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர பாஸ்: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

metro rail
பேருந்துகளில் வழங்கப்படுவது போல் மெட்ரோ ரயிலில் மாணவ மாணவிகளுக்கு மாதாந்திர பாஸ் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மெட்ரோ ரயிலில் தற்போது அதிக பயணிகள் பயணம் செய்து கொண்டு வருகின்றனர் என்பதும் ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயில் பயணம் செய்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்கனவே மாதாந்திர பாஸ் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில் தற்போது கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 40 சதவீத சலுகை கட்டணத்தில் மாதாந்திர பாஸ் என்ற புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. 
 
முதல் கட்டமாக அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இந்த பாஸ் வழங்கப்படும் என்றும் அடுத்த கட்டமாக தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பள்ளி மாணவிகளுக்கும் இந்த பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran