வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 19 மே 2017 (11:06 IST)

முன்னதாகவே பருவமழை: மத்திய அரபிக்கடலுக்கு மேல் செல்லக்கூடிய காற்று புயலாக மாற வாய்ப்பு!

முன்னதாகவே பருவமழை: மத்திய அரபிக்கடலுக்கு மேல் செல்லக்கூடிய காற்று புயலாக மாற வாய்ப்பு!

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடுமையான அனல் காற்றும் வெயிலின் தாக்கமும் இருந்து வருகிறது. ஆனால் சில மாவட்டங்களில் அவ்வப்போது வெப்ப சலன மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று இரவு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
 
குமரி மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. ஆனால் தலைநகர் சென்னையில் நேற்று இரவு பலத்த காற்று வீசியது ஆனால் மழை பெய்யவில்லை. இந்நிலையில் வங்காளவிரிகுடா மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் முன்னதாகவே பருவமழை தொடங்கியுள்ளது.
 
செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெற்கு அரேபியக்கடலில் மேகங்கள் குவிந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் மாலத்தீவில் மணிக்கு 47 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
மத்திய அரபிக்கடலுக்கு மேல் செல்லக்கூடிய காற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக உலகளாவிய கடல்சார் இடர்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் உள்ள மர்தபன் வளைகுடாவில் குறைந்த காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளதால் மியான்மர் நாட்டில் பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளது.