வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2016 (13:02 IST)

பண மோசடி புகார் : செந்தில் பாலாஜி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

 
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, காரைக்குடி அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாண் இயக்குநர் ரங்கராஜ், முன்னாள் இயக்குநர் பாபு ஆகியோர் மீது காரைக்குடியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
 
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் மனுத்தாக்கல் செய்தார்.
 
செவ்வாயன்று இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், மோசடி புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, காரைக்குடி அரசுப் போக்குவரத்துக்கழக மண்டல மேலாண் இயக்குநர் ரங்கராஜ், முன்னாள் இயக்குநர் பாபு ஆகியோர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
 
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி விமலா உத்தரவிட்டார்.