1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 16 நவம்பர் 2016 (18:56 IST)

ரூபாய் நோட்டு பிரச்சனை - 50 சதவீதமாக குறைந்த டாஸ்மாக் விற்பனை

ரூபாய் நோட்டு பிரச்சனை - 50 சதவீதமாக குறைந்த டாஸ்மாக் விற்பனை

500,1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் விற்பனை பாதி அளவு குறைந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.


 

 
பிரதமர் மோடியின் அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி, புதிய நோட்டுகளை பெறும் வேலையில் மும்முரமாக உள்ளனர். 
 
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, சாமானிய மனிதர்களை வெகுவாக பாதித்துள்ளது. சிறு தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு, தமிழக டாஸ்மாக் கடை விற்பனையையும் பாதித்துள்ளது. குடிமகன்களை தள்ளாட வைத்த டாஸ்மாக் பார்கள், கடந்த ஒரு வாரமாக, வழக்கமான விற்பனையில்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
 
டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாக்கெட் மற்றும் தின் பண்டங்கள், அசைவ உணவு வகைகள் ஆகியவை பெரிதாக விற்பனை ஆவதில்லை. இதனால் பார் உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனராம். அதேபோல்,  மது விற்பனையும் பாதியாக குறைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
தமிழகத்தில் மட்டுமில்லாமல், பாண்டிசேரி மாநிலத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறதாம்.