வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:27 IST)

ஒன்றும் செய்ய முடியாது.. கை விரித்த மத்திய அரசு - அதிர்ச்சியில் சசிகலா தரப்பு

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தாங்கள் எதுவும் செய்ய முடியாது என மத்திய அரசு கை விரித்து விட்டதால், சசிகலா தரப்பு கவலையில் ஆழ்ந்திருப்பதாக தெரிகிறது.


 

 
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகியோருக்கு எழுந்துள்ள மோதல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.  அவர்கள் இருவரும் நேற்று தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர ராவை சந்தித்து ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், ஆளுநர் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
 
இந்நிலையில், இந்த நிலையில் மத்திய அரசின் ஆதரவை பெற சசிகலா தரப்பு முடிவு செய்து, துணை சபாநாயாகர் தம்பிதுரையை கடந்த 8ம் தேதி டெல்லிக்கு அனுப்பி வைத்தது. அங்கு மோடியை சந்தித்த தம்பிதுரை, சசிகலா ஆட்சி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு பதிலளித்த மோடி, எதுவாக இருந்தாலும், ஆளுநர் முடிவெடுப்பார் எனக் கூறி விட்டாராம். 


 

 
அதன்பின், மத்திய அமைச்சார் அருண் ஜேட்லியை சந்தித்துள்ளார் தம்பிதுரை. அவரை பார்த்ததும் நீங்கள் துணை சபாநாயகராக என்னிடம் பேச வந்தீர்களா அல்லது சசிகலாவின் ஆளாக பேச வந்தீர்களா? என எடுத்த உடனே டாப் கியரில் அருண் ஜேட்லி கிளப்ப, ஆடிப்போனாராம் தம்பிதுரை. இருந்தாலும், சிரித்துக்கொண்டே சமாளித்து  ‘தமிழகத்தின் முதல்வர் பதவியில் சசிகலா அமர வேண்டும். இது தொடர்பாக  நீங்கள்தான் பிரதமரிடம் எடுத்து சொல்ல வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
அவருக்கு பதில் கூறிய அருண் ஜேட்லி “இந்த விவகாரத்தில் நான் உங்களுக்கு உதவ முடியாது. இதில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து அவர் நல்ல முடிவை எடுப்பார்” என கூறிவிட்டு தம்பிதுரையை அனுப்பி விட்டாராம்.
 
மோடி மற்றும் அருண் ஜேட்லி இருவரும் கை விரித்து விட்ட விவகாரம், சசிகலா தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது...