ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் சரவணன்!

ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் சரவணன்!


Caston| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (13:26 IST)
சரவணன் கூறியதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் கூவத்தூரில் சசிகலா அணியினர் எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதை கூறியிருந்தார்.

 
 
மேலும் அந்த வீடியோவில் ஓபிஎஸ் அணியினர் எம்எல்ஏக்களுக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசியதாக கூறியிருந்தது ஓபிஎஸ் அணியினருக்கு பெரும் அதிர்சியாக அமைந்தது. காரணம் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏ சரவணன் மாறு வேசத்தில் அங்கிருந்து தப்பித்து ஓபிஎஸ் அணியுடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் எம்எல்ஏ சரவணன் இன்று ஓபிஎஸ்-ஐ சந்தித்து அந்த வீடியோ தொடர்பான தனது விளக்கத்தை அளித்துள்ளார். முன்னதாக அந்த வீடியோவில் பேசியது நான் இல்லை, யாரோ டப்பிங் செய்துள்ளனர், மூன்று மாதத்திற்கு முன்பே எடுத்த வீடியோவை வெளியிடாமல் தாமதம் செய்தது ஏன்? எனக்கு யாரும் பணம் கொடுக்கவில்லை, இதுதான் உண்மை என தெரிவித்திருந்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :