திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (10:13 IST)

அப்பா வயதுள்ளவரை எப்படி திருமணம் செய்வேன்: ஓடிப்போன மணப்பெண் பேட்டி

பவானிசாகர் அதிமுக எம்எல்ஏ திருமணம் செய்யவிருந்த சந்தியா என்ற 23 வயது பெண் திடீரென மாயமான நிலையில் தற்போது அவர் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. இந்த திருமணம் குறித்து சந்தியா கூறியபோது, 'என்னுடைய அப்பா வயது உள்ளவரை எப்படி நான் திருமணம் செய்ய முடியும் என கண்ணீருடன் அவர் பதிலளித்தார்.

43 வயது அதிமுக எம்.எல்.ஏவான ஈஸ்வனுக்கு 23 வயது சந்தியா என்பவரை வரும் 12ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி திடீரென மணப்பெண் சந்தியா மாயமானார். அவர் ஒரு இளைஞரை காதலிப்பதாகவும், அந்த இளைஞரிடம் இருந்து தனது மகளை மீட்டித்தர வேண்டும் என்றும் சந்தியாவின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் மாயமான சந்தியாவை திருச்சியில் போலீசார் மீட்டனர். பின்னர் அவர் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதியிடம் சந்தியா கூறியபோது, 'எனக்கும் ஈஸவரனுக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. எனது அப்பா வயது உள்ளவரை எப்படி நான் திருமணம் செய்ய முடியும். என்னை கட்டாயப்படுத்தி என் பெற்றோர் திருமணம் செய்து வைக்க வற்புறுத்துகின்றனர். இந்த திருமணம் எனக்கு பிடிக்கவில்லை, அதனால் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று கூறினார். பின்னர் சந்தியாவை பெற்றோருடன் அனுப்ப அனுமதி அளித்த நீதிபதி, சந்தியாவை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தகூடாது என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த நிலையில் திட்டமிட்ட் அதே நாளில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறும் என்று ஈஸ்வரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது