Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதியா? அல்லது வியூகவதியா?


bala| Last Updated: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:29 IST)
ஆளுநரை சசிகலாவும் பன்னீர் செல்வமும் சந்தித்த நிலையில், ஒ பி எஸ் அரசு நம்பிக்கை வாக்கு கோரினால் தி மு க அதை நிபந்தனை இன்றி ஆதரிக்கும் என்று அந்த கட்சியின் துணை பொது செயலாளர் சுப்பு லட்சுமி ஜெகதீசன் கூறியதை உடனடியாக   தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் மறுத்து இருக்கிறார்.

 
 

இது வியூகமா
 
ஜானகி அணி- ஜெயலலிதா அணி என்பதைப் போல பன்னீர் அணி - சசிகலா அணி என்று அரசியல் சமன்பாடுகள் அணி வகுத்து வருகின்றன. இந்த  நிலை கண்ணா லட்டு தின்ன ஆசையா ? கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா ?
கண்ணா மூன்று லட்டு தின்ன ஆசையா ? என ஸ்டாலினை கேட்பது போல் உள்ளது.
 
முதல் லட்டு, அ தி மு க, பன்னீர் அணி - சசிகலா அணி என பிளவுப்பட்டு உள்ளது.
 
இரண்டாவது லட்டு களத்தில் பலகீனமான, அனுபவம் இல்லாத, ஊழல் வழக்கில் தீர்ப்பை நோக்கி காத்திருக்கும்  எதிரிகள்,
 
மூன்றாவது லட்டு, ஒருவேளை கவர்னர் ஆட்சி யை செயல்படுத்தினால், அதை தொடர்ந்து ஆறு மாதங்களில் வரும்  சட்ட மன்ற தேர்தல்.

இது சந்தர்ப்பவாதமா
 
                        இது வரை ஐந்து  எம் எல் ஏ கள்  மட்டுமே பன்னீர் அரசை ஆதரிக்கின்றன. பன்னீர் அணி என்ற மூழ்கும் கப்பலை எம் எல் ஏ க்கள் விருப்ப மாட்டார்கள். ஓடும் குதிரையை  தான் களம் விரும்பும்.   ஸ்டாலினின் இந்த மறுப்பு, பன்னீர் அரசை தி மு க ஆதரிக்கவில்லை என்று காட்டினாலும்,இந்த இக்கட்டான நிலையில் மேலும் சில எம் எல் ஏ கள்  பண்ணீர் பக்கம் தைரியமாக வருவதை  ஸ்டாலின் தடுத்து இருக்கிறது. 1988 ல் ஜானகி இராமச்சந்திரன் நம்பிக்கை வாக்கு கோரும் போதும் தி மு க அதை ஆதரிக்க வில்லை என்பது குறிப்பிட தக்கது. தெளிவான களத்தை பயன் படுத்தி பலகீனமான எதிரிகளைக் கொண்டு தேர்தலை சந்திக்க விருப்பும் ஸ்டாலினின் சுய நலத்தை காட்டுக்கிறது இது.
 
அ தி மு க கூடாரம் தானாக காலியாக வேண்டும் என்று உறு மீன் கொக்கு போல ஸ்டாலின் காத்திருக்கிறார் . காலம் கணித்து தனித்து வரும் வரை ஸ்டாலின் காத்திருப்பார். அதே வேளையில் சசிகலாவா  ? பன்னீர் செல்வமா ? என்றால் பன்னீர் செல்வதை ஆதரிக்கும் ஸ்டாலின், ஸ்டாலினா ?  பன்னீர் செல்வமா ? என்ற அடுத்த கட்ட நகர்வை விருப்ப மாட்டார். இன்னும் சொல்ல போனால் பன்னீர் செல்வம் ஒரு மாபெரும் தலைவராக உருவாவதை ஸ்டாலின் விருப்ப மாட்டார் 
  


இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
Sumai244@gmail.com
 
இதில் மேலும் படிக்கவும் :