வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 மே 2022 (09:02 IST)

27 பேரை கொன்ற டெல்லி தீ விபத்து: ஸ்டாலின் இரங்கல்

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் தீயில் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 
டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடி கட்டிடம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு சிலர் காயமடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தற்போது டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லி தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.