1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூன் 2020 (15:54 IST)

உண்மையை கூறினால் மிரட்டுவதா? வரதராஜனுக்கு ஆதரவாக முக ஸ்டாலின்

உண்மையை கூறினால் மிரட்டுவதா?
நடிகரும் செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் அவர்கள் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் தனது நண்பர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு எந்த தனியார் மருத்துவமனையிலும் அரசு மருத்துவமனையிலும் பெட் கிடைக்கவில்லை என்றும் அதன் பின்னர் கடைசியாக ஒரு மருத்துவமனையில் பெட் கிடைத்ததாகவும் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்
 
வரதராஜனின் இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானதை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும் தாராளமாக பெட் உள்ளது என்றும் வரதராஜன் தவறான தகவலை கூறி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து இன்று காலை வரதராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ’செய்தி வாசிப்பாளர் வரதராஜன் அவர்கள் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து வீடியோவாக பதிவு இட்டிருந்தார். அதனை பொறுக்க முடியாமல் வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்றும், மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் என்றும் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
நடிகர் வரதராஜனுக்கு ஆதரவாக முக ஸ்டாலின் கருத்து தெரிவிப்பது தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே நடிகர் பிரசன்னாவுக்கும் ஆதரவாக முக ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது