அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில்… பிரம்மாண்ட புத்தக பூங்கா! – முதல்வர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தக பூங்கா அமைக்க உதவி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை புத்தக திருவிழா நடந்து முடிந்த நிலையில் அதில் பங்கேற்ற பதிப்பகங்கள் பல புத்தகங்களை நிரந்தரமாக கண்காட்சி படுத்தவும், விற்பனை செய்யவும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ் ஆட்சியாக, தமிழன் ஆட்சியாக நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோ. இதில் நாங்கள் என்று கூறுவது உங்களையும் சேர்த்துதான். அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தக பூங்கா அமைக்க அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும்” என அவர் தெரிவித்துள்ளார்.