Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் திடீர் கோரிக்கை


K.N.Vadivel| Last Modified வியாழன், 24 டிசம்பர் 2015 (23:44 IST)
சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதியில் சேவை செய்த துப்புறவு பணியாளர்களுக்கு, பதவி உயர்வும், பணி நிரந்தரமும் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
இது குறித்து, பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
 
சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் குவிந்து கிடந்த குப்பைகளை சரிசெய்ய இரவு பகலாக பாடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களின் சுகாதார வசதிகள் குறித்து அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை.
 
சென்னையில் உள்ள மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுக்க வேண்டும்.
 
வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு சென்னையில் அவர்களின் பணி முடிந்து விட்டது என்றால் அவர்களை பாதுகாப்பான முறையில் சொந்த ஊர்களுக்கு திரும்ப அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
 
மேலும், அவர்கள் அவர்கள் சென்னையில் ஆற்றிய சேவையை கு அங்கீகரிக்கும் வகையில், அர்களின் கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வும், பணி நிரந்தரமும் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :