வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (08:21 IST)

விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு: முக ஸ்டாலின் தலைமையில் இன்று போராட்டம்!

சமீபத்தில் மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை கொண்டு வர முடிவு செய்து அதனை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. இரு அவைகளிலும் திமுக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த போதிலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மூன்று மசோதாக்களில் நிறைவேற்றப்பட்டது
 
அதுமட்டுமின்றி இந்த மசோதாக்கள் குடியரசு தலைவரின் தலைவரின் ஒப்புதலையும் பெற்று அரசு இதழில் வெளியானது என்பதால் இந்த சட்டம் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன
 
அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் திமுக இந்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது 
 
அதேபோல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் இந்த போராட்டத்தை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாய சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்ற பிறகு இந்த போராட்டம் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்