1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (11:45 IST)

சட்டமன்றத்திற்குள் எம்.எல்.ஏவாக நுழைந்திருக்க வேண்டியவர்: முக ஸ்டாலின் இரங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் அவர்கள் கொரோனாபாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென இன்று காலை உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உண்மையான கலப்படமில்லாத காங்கிரஸ்காரர் என மாதவராவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் அறிவிப்பில் ’சட்டமன்ற உறுப்பினராக பேரவைக்குள் நுழைந்திருக்க வேண்டியவர் மாதவராவ் என்றும் அவருடைய மறைவு பேரிழப்பு என்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்