1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (13:42 IST)

நம்ம டார்கெட் எடப்பாடிதான் – ஸ்டாலின் பின் வாங்க காரணம் இதுதானாம்?

தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இருந்து தி.மு.க பின் வாங்கியது குறித்து பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

போதிய ஆதரவு இல்லாததால்தான் தீர்மானத்தை திமுக வாபஸ் வாங்கி கொண்டது என பேசப்படுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் ஸ்டாலின் எடப்பாடியை தூக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதனால்தான் சபாநாயகர் மீதான தீர்மானத்தை வாபஸ் பெற்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சபாநாயகர் மீதான் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வரைவை இடைதேர்தலுக்கு முன்பே ஆளுனரிடம் கொடுத்துவிட்டது திமுக. அன்றைய சூழலில் அதிமுகவின் பலத்தை அசைத்து பார்க்க திமுகவுக்கு கிடைத்த வாய்ப்பு அது மட்டும்தான். ஆனால் மக்களவை தேர்தலும், இடைத்தேர்தலும் திமுகவின் திட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

நடந்து முடிந்த தேர்தல்கள் திமுகவின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. திமுக தான் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என இப்போதே பேசி வருகிறார்கள். ஸ்டாலின் கலைக்கா விட்டாலும் அதிமுக தானாக கலைந்து போக கூடிய நிலையில் உள்ளது. மேலும் அமமுக கலைந்து அதில் உள்ளவர்கள் திமுகவில் இணைந்து கொண்டிருப்பது மற்றொரு பலமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் சபாநாயகர் தனபால் சட்டமன்றத்தில் ஓரளவு நடுநிலையாக செயல்பட கூடியவர். அவரை பகைத்து கொள்வதால் பட்டியலின மக்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. மேலும் மக்களுக்கு தற்போது எடப்பாடி மேல் பயங்கர கோபம் இருக்கிறது. அதை தூபம் போட்டு வளர்தாலே அடுத்த ஆட்சி தானாக திமுக கையில் வந்துவிடும்.

இதையெல்லாம் கணித்த பிறகுதான் திமுக இந்த தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேற்கொண்டு ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் உட்கார இருக்கிறார். அது வேறொரு ஆட்சியை கலைத்துவிட்டு அமருவதாக இல்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமர்ந்தால் கௌரவமாக இருக்கும் என ஸ்டாலின் செண்டிமெண்டாக யோசிப்பதாகவும் சொல்லப்படுகிறது.