இந்தியாவின் பிரபலமான முதலமைச்சர்கள்! – மு.க.ஸ்டாலின் முதலிடம்!
இந்தியாவில் நடப்பு ஆண்டின் பிரபலமான முதல்வர்கள் குறித்த சர்வேயில் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பதவியேற்று 100 நாட்களை தாண்டி விட்ட நிலையில் சமீபத்தில் இந்தியா ஹெரால்டு இந்தியாவின் பிரபலமான முதல்வர்கள் குறித்து நடத்திய சர்வேயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அவரவர் மாநிலத்தில் புகழ்மிக்க முதல்வராக 42% கருத்துகளை மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். 38% வாக்குகளோடு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்திலும், 35% வாக்குகளோடு கேரள முதல்வர் பினராயி விஜயன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.