1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (13:29 IST)

இந்தியாவின் மூத்த மொழிக்கு தொல்லியலில் கூட மரியாதையில்லையா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அரசின் தொல்லியல் துறை படிப்புகளுக்கான அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான அறிவிப்பில் கல்வி தகுதியாக சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் மொழி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் ”இந்தியாவின் பன்முகத்தன்மையை பாழ்படுத்தி ஒருமைப்பாட்டினை குலைப்பதையே பாஜக அரசு கொள்கையாக கொண்டுள்ளது. தொடர்ந்து தமிழை புறக்கணிக்கும் வேலையை செவ்வனே செய்து வருகிறார்கள். தற்போது தொல்லியல் படிப்புக்கான கல்வி தகுதியில் தமிழ் மொழி இல்லாததும், பட்டய படிப்புக்கான அறிவிக்கையில் தமிழ் இல்லாததும் கண்டனத்திற்கு உரியவை” என கூறியுள்ளார்.

மேலும் “தமிழ் - தமிழர் நலன் புறக்கணிப்பைத் தொடர்ந்து வரும் இந்திய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து குரல் எழுப்புவோம்!” என்று கூறியுள்ளார்.