வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2017 (11:14 IST)

முதல்வர் பன்னீர்செல்வத்தை போனில் அழைத்து வாழ்த்து சொன்ன ஸ்டாலின்!

முதல்வர் பன்னீர்செல்வத்தை போனில் அழைத்து வாழ்த்து சொன்ன ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது 66-வது பிறந்த நாளை நேற்று தனது குடும்பத்தினருடன் எளிமையாக தனது சொந்த கிராமத்தில் கொண்டாடினார். அவரை தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.


 
 
முதல்வர் பன்னீர்செல்வம் பொங்கல் திருநாளையும் தனது பிறந்த நாளையும் சேர்த்து நேற்று கொண்டாடினார். பெரியகுளத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய அவருக்கு பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார்.
 
அதே போல தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் தற்போது திமுக செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் முதல்வர் பன்னீர்செல்வத்தை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.
 
திமுக, அதிமுக கட்சிகள் எதிரும் புதிருமான கட்சி. இந்நிலையில் திமுக செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலின் அதிமுக அரசில் முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வத்தை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியது வரவேற்கத்தக்க ஒன்றாக பேசப்படுகிறது.