Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கருணாநிதியை சந்தித்த மு.க.அழகிரி: திமுகவில் பரபரப்பு

வெள்ளி, 6 ஜனவரி 2017 (15:25 IST)

Widgets Magazine

செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசியது தொண்டர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்.

இதனையடுத்து, திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 04ஆம் தேதி பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். திமுகவின் சட்டவிதி 18ல் திருத்தம் செய்யப்பட்டு, அவர் செயல் தலைவராக ஆக்கப்பட்டார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் முக அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி மீண்டும் திமுகவில் சேர்த்து கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நடுவானில் இன்ஜின் கோளாறு 176 பயணிகளுடன் தப்பிய விமானம்

பெங்களூரில் இருந்து துபாய் சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென எந்திர ...

news

சசிகலா அதிமுகவிற்குள் புகுந்த கரையானா?

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ...

news

செப்.23ம் தேதி புரோகிதர் ஏன் அப்பல்லோ வந்தார்? - வைரல் அதிர்ச்சி வீடியோ

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதியே, அப்பல்லோவில் ஈமச் ...

news

தோனியே எப்போதும் என் கேப்டன் - விராட் ஹோலி நெகிழ்ச்சி

ஒருநாள் போட்டி மற்றும் டி20 ஆகிய போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக இந்திய ...

Widgets Magazine Widgets Magazine