1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (11:18 IST)

காணாமல் போன 14 வயது மகள்: குழந்தையோடு திரும்பியதால் அதிர்ச்சி!

காணாமல் போன 14 வயது மகள்: குழந்தையோடு திரும்பியதால் அதிர்ச்சி!

சேலம் தாரமங்கலம் காந்தி சிலை அருகே நேற்று முன்தினம் இரவு 7 மாத குழந்தை ஒன்று அனாதையாக கிடந்துள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் போய் பார்த்தபோது குழந்தையும் அருகில் புது துணிகளும் இருந்துள்ளது.


 
 
இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் குழந்தையை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் அந்த குழந்தை என்னுடைய மகளின் குழந்தை என கூறியுள்ளார். நானும், உறவினர்களும் அவளை திட்டியதால் குழந்தையை சாலையிலே விட்டுவிட்டு சென்றுள்ளார் என கூறியுள்ளார்.
 
அவர் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்டார். எனக்கு 17 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். என்னுடைய இளைய மகள் 13 வயது இருக்கும் போது காணாமல் போனார். பல இடங்களில் அவளை தேடினோம் ஆனால் அவள் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில் சமீபத்தில் அவர் கையில் குழந்தையுடன் வந்தாள். அவளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உறவினர்கள் எல்லாரும் திட்டினார்கள். கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் அருகே இருந்தாள். நானும் அவளை திட்டியதால் மனமுடைந்து குழந்தையை சாலையில் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்.
 
மகளை காணாமல் தேடி வந்தபோது தான் குழந்தை காவல் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது என அந்த பெண் கூறினார். இதனையடுத்து தீர விசாரித்து குழந்தையை அந்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.