சமையல்காரர் பெயரில் சேகர் ரெட்டியுடன் விஜயபாஸ்கர் கூட்டணி


Abimukatheesh| Last Updated: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (11:39 IST)
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமையல்காரர் பெயரில் ப்ளூமெட்டல் நிறுவனம் நடத்தி வந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 
ஆர்.கே.நகர் நகர் இடைத்தேர்தலின்போது பணம்பட்டுவாடா செய்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதற்காக அவர்கள் வைத்திருந்த ஆவணம் சிக்கியது. அதோடு சேர்ந்து மேலும் பல ஆவணங்கள் சிக்கியது.
 
இதைத்தொடர்ந்து விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி, தந்தை, சகோதரர் என அனைவரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை இன்றுவரை தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 1ஆம் தேதி இரவு விஜயபாஸ்கரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது விஜயபாஸ்கர் தனது சமையல்காரர் பெயரில் ப்ளூமெட்டல் என்ற நிறுவனம் நடத்தி வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
சேகர் ரெட்டிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆவணங்கள் சிக்கியுள்ளது. அதில், விஜயபாஸ்கர் தனது சமையல்காரர் பெயரில் நடத்தி வந்த நிறுவனமும், சேகர் ரெட்டி நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு மற்றும் எவ்வாறு இவருக்கும் இடையே பண பரிமாற்றம் நடந்துள்ளது என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது.
 
இந்த செய்தி தற்போது தமிழக முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பெயரில் நிறுவனம் ஒன்று உள்ளது என்பது அந்த சமையல்காரர்க்கு தெரியுமா?

webdunia

இதில் மேலும் படிக்கவும் :