வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 15 ஜூலை 2017 (16:12 IST)

கமல்ஹாசனை மிரட்ட போய் பல்பு வாங்கிய அமைச்சர் வேலுமணி!

கமல்ஹாசனை மிரட்ட போய் பல்பு வாங்கிய அமைச்சர் வேலுமணி!

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டதாக கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக பல அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என கூறி பலதரப்பட்ட மக்களின் கண்டனங்களை வாங்கிக்கொண்டார். இதனை தொடர்ந்து கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதோடு, அவரை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் போராட்டம் நடத்தினர். போலீசாரிடம் புகாரும் அளித்தனர்.
 
இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் அன்பழகன் கமல்ஹாசனை ஒருமையில் பேசினார்.
 
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கமல்ஹாசனை மிரட்டும் தொனியில் பேசினார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் இருந்தால் அதை கமல்ஹாசன் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அப்படி கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.
 
மேலும், கமல் தன்னுடைய படங்களுக்கு முறையாக வரி செலுத்தியுள்ளாரா என்பதை ஆய்வு செய்யட்டுமா? என மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்பினார் அமைச்சர் வேலுமணி. ஆனால் வருமான வரி என்பது மத்திய அரசுடன் தொடர்புடையது. அந்த துறைய சார்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மட்டுமே அதனை ஆய்வு செய்ய முடியும்.
 
இப்படி இருக்கும் போது அமைச்சர் வேலுமணி எந்த வரியை ஆய்வு செய்ய போவதாக கூறி கமல்ஹாசனை மிரட்டுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அமைச்சருக்கு வருமான வரித்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வராது அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பது தெரியாதா என சமூக வலைதளத்தில் கிண்டலடிக்கப்படுகிறது.