1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜூன் 2024 (10:11 IST)

விஷச்சாராய விவகாரம்: கள்ளக்குறிச்சி விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச்சாராய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. 
 
நேற்று கள்ளக்குறிச்சி அருகே விஷச்சாராய  குடித்த ஐந்து பேர் பலியானதாக முதல் கட்ட செய்தி வெளியான நிலையில் அதன் பின் படிப்படியாக உயிர்ப்பலி அதிகரித்து தற்போது 30 பேர் வரை உயிர் இழந்திருப்பதாகவும் இன்னும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய தொடர்பாக ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, அன்புமணி, விஜய் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திமுக அரசும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 
அந்த வகையில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று கள்ளக்குறிச்சி வருகிறார் என்றும் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran