வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (10:12 IST)

நீட் தேர்வில் ஆதரவும் இல்ல; எதிர்ப்பும் இல்ல! – மையமாக நழுவிய உதயகுமார்!

மத்திய அரசின் நீட் தேர்வுக்கு அதிமுக ஆதரவு இல்லை என தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் உதயகுமார் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என தமிழக எதிர்க்கட்சிகள் போராடி வந்த நிலையில், ஆளும் அதிமுக அரசு தான் என்றும் நீட்டை ஆதரிக்கவில்லை என்றும், நீட்டை தமிழகத்திற்குள் கொண்டு வராமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக கூறியிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு தாமதமாகி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமாருக்கு அமைச்சர் உதயகுமார் மதுரையில் நடந்த விழாவில் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அப்போது பேசிய அவர் “நீட் தேர்வை சில ஆண்டுகளாவது தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தோம். முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்பதை மாணவன் ஜீவித் நிரூபித்துள்ளார். போட்டித்தேர்வுகள் மாணவர்களின் திறனை வளர்க்கும். மத்திய அரசு அவகாசம் கொடுத்தால் தமிழக அரசு பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும். நீட் தேர்வுக்கு எனது ஆதரவும் இல்லை.. அதேசமயம் எதிர்ப்பும் இல்லை” என தெரிவித்துள்ளார்.