விசுவாசத்தின் உருவமே நீங்கதான்; ஓபிஎஸை புகழும் இவர் யார் என்று தெரிகிறதா!

விசுவாசத்தின் உருவமே நீங்கதான்; ஓபிஎஸை புகழும் இவர் யார் என்று தெரிகிறதா!


Caston| Last Modified புதன், 19 ஏப்ரல் 2017 (13:40 IST)
விசுவாசத்தின் மறு உருவமே ஓபிஎஸ் தான், அவரிடம் இருந்து தான் நாங்கள் விசுவாசத்தை கற்றுக்கொண்டோம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரேயடியாக ஓபிஎஸை புகழ்ந்து தள்ளியுள்ளார். ஆனால் இவர் தான் சில மாதங்களுக்கு முன்னர் ஓபிஎஸுக்கு எதிராக முதன் முதலாக பேச ஆரம்பித்தவர்.

 
 
அதிமுகவை காப்பாற்றவும், ஆட்சியை சிறப்பாக நடத்தவும் ஓபிஎஸ் அணியுடன் இணைந்து செயல்பட தயாரக உள்ளோம் என நேற்று முன்தினம் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி அறிவித்தனர்.
 
அதன் பின்னர் நேற்று இரவு ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் கட்சியை காப்பாற்ற தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை முற்றிலுமாக கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கூறினர். இதனையடுத்து இதுநாள் வரை ஓபிஎஸ்ஸை இகழ்ந்து வந்த அதிமுக அம்மா அணியை சேர்ந்தவர்கள் தற்போது புகழ்ந்து பேச ஆரம்பித்துள்ளனர்.
 
இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், விசுவாசத்தின் மறு உருவம் ஓபிஎஸ் தான். அவரை பார்த்து தான் நாங்கள் விசுவாசத்தை கற்றுக்கொண்டோம் என புகழ்ந்து தள்ளினார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்தை எழுப்பியதால் தான் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது மற்றபடி அவர் மீது எந்த விமர்சனமும் இல்லை என்றார்.
 
இதே அமைச்சர் உதயக்குமார் தான் ஓபிஎஸ் முதல்வராக இருக்கும் போது, அவரது தலைமையில் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது சசிகலா முதல்வராக வர வேண்டும் என முதன் முதலாக ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பேச ஆரம்பித்தார்.
 
இதற்கு அவர் கூறிய காரணம், கட்சிப்பொறுப்பும், ஆட்சிப் பொறுப்பும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என சப்பைக்கட்டு கட்டினார். தொடர்ந்து சசிகலா புகழை பாடிவந்த அமைச்சர் உதயகுமார் இப்போது ஓபிஎஸை விசுவாசத்தின் மறு உருவம், அவரிடம் இருந்து தான் நாங்கள் விசுவாசத்தை கற்றுக்கொண்டோம் என புகழ்ந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :