திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (09:59 IST)

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதியின் உருவ சிலை மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக மணல்மேடு கிராமத்தில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் ஏற்பாட்டில்  நிறுவப்பட்டுள்ளது.
 
மணல்மேடு கடைவீதியில் உள்ள கலைஞர் படிப்பகம் வளாகத்தில் கலைஞரின் எட்டே கால் அடி உயரம் கொண்ட முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.  
 
தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று எட்டே கால் அடி உயரம் உள்ள வெண்கல சிலையை திறந்து வைத்தார். 
 
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி மெய்யநாதன், தமிழ்நாடு சட்டமன்ற கொறடா கோ. வி செழியன்  மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ, சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.