1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (10:38 IST)

மகளிர் உரிமை தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தங்கம் தென்னரசு..!

மகளிர் உரிமைத் தொகை ஏற்கனவே ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.  

மகளிர் உரிமை தொகை திட்டம் ரூபாய் 1000 கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஒரு கோடிய 6 லட்சத்து ஐம்பதாயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திட்டத்தில் பயன்தராதவர்களுக்காக  ஏற்கனவே ஒரு முறை விண்ணப்பம் வழங்க வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியிருந்தும் விடுபட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும், கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில்  உரிமைத் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஜனவரி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Edited by Siva