வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (11:35 IST)

அதிகரிக்கிறதா டெங்கு காய்ச்சலா? மா.சுப்பிரமணியன் பேட்டி!

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்புளூவன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.


புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதோடு, புதுச்சேரியில் காய்ச்சலால் புறநோயாளிகளாக சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 747ஆக குறைந்துள்ளது. புறநோயாளிகளாக சிகிச்சை பெறும் எண்ணிக்கை 829ல் இருந்து தற்போது 747ஆக குறைந்த நிலையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று இன்புளூவன்சா காய்ச்சல் மருத்துவத்திற்காக 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி தமிழகத்தில் இன்று 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் தொடங்கியது.

இந்த முகாமில் சளி, தலைவலி, இருமல், இருப்பவர்கள் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.  பூவிருந்தவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோலப்பஞ்சேரியில் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

மேலும், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைக் கட்டுப்படுத்த 3 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். எந்த ஊரிலும் 3 பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால் நாளை முதல் சிறப்பு முகாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.