1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (11:09 IST)

உயிரைத் துறப்பது முடிவல்ல: நீட் தற்கொலை குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன்!

மாணவ மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட்தேர்வு அச்சம் காரணமாக இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை மா சுப்பிரமணியன் அவர்கள் கருத்து கூறியுள்ளார்
 
குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று கூறிய மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் மேட்டூர் அருகே நீட் தேர்வு எழுத வந்த மாணவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்
 
மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருவதாகவும் நீட் தேர்வு விலக்கு கோரி நாளை சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும் தற்கொலை தீர்வு அல்ல அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.