1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (16:40 IST)

'கோல்டுமிக்ஸ்' புதிய வகை தொழில்நுட்பத்தை கொண்டு சாலைகளை சீரமைக்கும் பணி: அமைச்சர் வேலுமணி

கோல்டுமிக்ஸ் எனப்படும் புதிய வகை தொழில்நுட்பத்தை கொண்டு சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

 
சென்னை சைதாப்பேட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அதில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, கோகுல இந்திரா, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்பொழுது கூறுகையில் "தமிழகம் முழுவதும் மழையால் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கா கோல்டுமிக்ஸ் எனப்படும் புதிய வகை தொழில்நுட்பத்தை கொண்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கையால் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.