1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (17:53 IST)

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா..??

நடமாடும் ரேசன் கடைகள் கொண்டு வரப்பட இருப்பதால் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூடப்படுமா என செல்லூர் ராஜூ பதில். 
 
இன்று செய்தியாகளை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் உள்ள 4449 கூட்டுறவு சங்கங்களும் கணிணி மையம் ஆக்கப்பட்டுள்ளதால் தட்டுப்பாடின்றி தேவையான பொருள்கள் தடையின்றி கிடைக்கிறது என தெரிவித்தார். 
 
அதோடு, நகர் புறங்களில் ரேசன் கூட்டம் அதிகரிப்பது மற்றும் கடைகள் வாடகைக்கு கிடைக்காததால் நடமாடும் ரேசன் கடைகள் கொண்டு வரப்பட இருப்பதாகவும் தெரிவித்த அவர், இந்த அடுத்த மாதம் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது என தெரிவித்தார்.
 
மேலும், ரேஷன் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்பதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவில்லை என்றும் ரேஷன் கடைகள் மூடப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.