செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (16:02 IST)

அமைச்சர் சரோஜா வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம்?: இளங்கோவன் அதிரடி!

அமைச்சர் சரோஜா வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம்?: இளங்கோவன் அதிரடி!

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது அவரது துறையை சேர்ந்த மீனாட்சி என்ற அதிகாரி லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு புகார் ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் கூறினார். இதனையடுத்து அமைச்சர் சரோஜா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டாரா என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.


 
 
தர்மபுரியில் இருந்து சென்னைக்கு இடமாறுதல் கேட்ட மீனாட்சியை தனது வீட்டிற்கு நேரடியாக வரவழைத்த அமைச்சர் சரோஜா அவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக மீனாட்சி புகார் கூறினார்.
 
அவரது புகாருக்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு வாரத்திற்கு பின்னர் தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என அறிக்கை வெளியிட்டார் சரோஜா. இந்நிலையில் அதன் பின்னர் அமைச்சர் சரோஜாவையும், புகார் கொடுத்த பெண் அதிகாரியையும் பற்றிய தகவல்கள் வரவில்லை. அரசு விழாக்களிலும் சரோஜா தென்படவில்லை.
 
இதனையடுத்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் லஞ்ச புகாரில் சிக்கிய அமைச்சர் சரோஜாவையும் காணவில்லை. புகார் கொடுத்த அதிகாரியையும் காணவில்லை. சரோஜா வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டாரா? என கேள்வியெழுப்பினார். மேலும் சரோஜாவை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.