வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2018 (13:54 IST)

பாவத்தை துடைக்கத்தான் இராமேஸ்வரம் செல்வார்கள்: கமல் அரசியல் பயணம் குறித்து ஆர்.பி.உதயகுமார்

எல்லோரும் இறுதி காலத்தில் தங்கள் பாவத்தை துடைக்கத்தான் இராமேஸ்வரம் செல்வார்கள். அதைபோல பாவத்தை துடைக்கத்தான் கமல் இராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 
 
இன்று மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாவத்தை கழிக்க கமல்ஹாசன் ராமேஸ்வரம் சென்றுள்ளார்; சினிமா நடிகர்கள் வந்து சேவை செய்யும் அளவுக்கு தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் ஏற்படவில்லை. கலைத்துறையில் இருக்கும்போது என்ன சேவை செய்தீர்கள்? திடீரென ஞானோதியம் வந்துவிட்டதா? என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே அமைச்சர் ஜெயகுமார், கமல்ஹாசனை காகிதப்பூ என்றும், பயன்படாத மரபணு மாற்றப்பட்ட விதை என்றும் விமர்சனம் செய்த நிலையில் தற்போது அமைச்சர் ஆர்பி உதயகுமாரும் அவரை விமர்சனம் செய்துள்ளார். இந்த விமர்சனங்களுக்கு இன்று மாலை கமல் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.