1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜூலை 2023 (14:42 IST)

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குங்கள்: ஆளுனருக்கு அமைச்சர் கடிதம்..!

Minister Ragupathi
நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குங்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். 
 
நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்தில் ‘ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்க ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது  என்றும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா வழக்கில் நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கான ஒப்புதல் கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள், ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன என்றும், 13 மசோதாக்களில் 2 மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன என்றும் அமைச்சர் ரகுபதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran