பி.இ., கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடி
பி.இ., மற்றும் கலை அறிவியல் கல்லூரி படிப்புக்கு ஆன்-லைனில் கலந்தாய்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்
சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தபோது பி.இ., கலை அறிவியல் கல்லூரி படிப்புக்கு ஆன்-லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அனைத்து கல்லூரிகளும் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்
மேலும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி ஐந்து நாட்கள் வரை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் சிபிஎஸ்சி தேர்வுகளை எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை என்பதால் அந்த தேர்வு முடிவு வெளியாகும் வரை கலந்தாய்வுக்கான கால நேரம் நீட்டிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்றும் இன்னும் இரண்டு முதல் மூன்று லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்