திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 20 ஜனவரி 2019 (06:03 IST)

இதை செய்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார்! ஸ்டலினுக்கு அமைச்சர் மணிகண்டன் சவால்

நேற்று கொல்கத்தாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டிய பிரமாண்டமான எதிர்க்கட்சி தலைவர்களின் இந்தியாவின் அனைத்து முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியபோது குறிப்புகளை வைத்து கொண்டு பேசியபோதிலும் தடுமாறியதாக பலர் விமர்சனம் செய்திருந்தனர். ஸ்டாலின் ஏற்கனவே ஒருசில மேடைகளில் சில வார்த்தைகளையும், பழமொழிகளையும் மாற்றி பேசி கடும் விமர்சனத்திற்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்டாலினின் நேற்றைய கொல்கத்தா பேச்சு குறித்து டுவிட்டர் நெட்டிசன்கள் #துண்டுசீட்டுஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கையும் நேற்று டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் ஸ்டாலின் தொடர்ந்து ஐந்து நிமிடம் ஆங்கிலத்தில் பேசினால் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயார்" என்று கூறியுள்ளார். அமைச்சரின் சவாலை திமுக தலைவர் ஏற்றுக்கொள்வாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்