தடுப்பூசி கட்டாயமல்ல, ஆனால் போட வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசி கட்டாயம் அல்ல என்றும் ஆனால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
இன்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியம் அவர்கள் தடுப்பூசி கட்டாயம் அல்ல என்று கூறப்பட்டுள்ளதே தவிர தடுப்பூசி போடக்கூடாது என்று கூறவில்லை என்றும் தாமாக முன்வந்து அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்
மேலும் அரசின் கொரோனா வைரஸ் வழிகாட்டுதலை பொது மக்கள் தாமாக முன்வந்து பின்பற்ற வேண்டும் என்றும் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது நல்லது என்றும் கூறினார். அதேநேரம் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்