புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 ஜூன் 2019 (17:01 IST)

ஜூன் 12 தண்ணீர் வராது – அமைச்சர் காமராஜ்

காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுபடி கர்நாடகா வரும் ஜூன் 12 க்குள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் தற்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காமராஜ் தண்ணீர் திறக்கப்படாது என்று கூறியிருப்பது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரிய பரிந்துரையின்படி ஜூன் 12க்குள் 92டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும். ஆனால் கர்நாடக அரசாங்கமோ தங்கள் தேவைக்கே தண்ணீர் போதவில்லை என்றும், மழை பொழிவு சரியாக இல்லாததால் தண்ணீர் நிரம்பவில்லை என்றும் சொல்லி கை விரித்துவிட்டன. இந்நிலையில் மேட்டூர் அணை இருப்பிலாவது தண்ணீர் வந்தால் விவசாயத்தை மேற்கொள்ளலாம் என விவசாயிகள் நம்பியிருந்தனர். தற்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “அணையில் நீர்வரத்து மிகவும் குறைவாக இருப்பதால் தண்ணீர் திறக்க போவதில்லை. ஆழ்துளை கிணறுகள் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும் குறுவை சாகுபடிகளை மேற்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

இது விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.