1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (03:41 IST)

தமிழக அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவு காரணமாக தமிழக அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், உணவு மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் காமராஜ். இவர், திருவாரூர் மாவட்ட செயலராகவும் பணியாற்றி வருகிறார்.
 
இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம்  திருவாரூரில் இருந்து சென்னை புறப்பட்டு வந்தார். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே, அவரை,  சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் திருவாரூர் மாவட்டத்தில் தீயாக பரவியாதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.