திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (12:54 IST)

புலிவாலைப் பிடித்த அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தாய்லாந்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவுக்கு சென்று அங்குள்ள ஒரு புலியுடன் விளையாடுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவின் சார்பாக பத்திரிக்கையாளர்களை அதிகமாக சந்தித்து வருவபர் அமைச்சர் ஜெயக்குமார். அந்த கட்சியில் யார் எது கூறினாலும் அதற்கு விளக்கம் அளிப்பதற்கோ அல்லது எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கோ அதிமுக சார்பில் அதிமுக சார்பில் ஆஜராவது ஜெயக்குமார்தான்.

அதுமட்டுமல்லாமல் நிருபர்களின் கேள்விக்கு நக்கலாக பதிலளிப்பது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாட்டு பாடி தொண்டர்களை மகிழ்விப்பது எனக் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமாகி இருக்கிறார்.

அதேப் போல தன்னைப் பற்றி வரும் மீம்ஸ்களையும் சாதாரனமாக எடுத்துக்கொள்ளும் அவர், தற்போது தாய்லாந்து நாட்டுக்கு அரசமுறைப் பயணமாக சென்றுள்ளார். அங்குள்ள ஒரு உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு புலியிடன் விளையாடுவது போலவும். அதன் வாலைப் பிடித்துள்ளது போலவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுபோலவே கடந்த ஆகஸ்டு மாதம் ஜப்பான் சென்றிருந்த போது தனது மடியில் சிங்கக்குட்டி ஒன்று அமர்ந்திருந்தப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.