புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 19 ஜனவரி 2019 (22:25 IST)

தேர்தல் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமையேற்கும்: அமைச்சர் ஜெயகுமார்

வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக வலிமையான கூட்டணியை அமைக்கும் என்றும் அந்த கூட்டணிக்கு அதிமுகவே தலைமை வகிக்கும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக உள்பட ஒருசில கட்சிகள் இருக்கும் என வதந்திகள் பரவியது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயகுமார், 'தேர்தல் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை ஏற்கும். கட்சி அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது' என்று கூறினார். மேலும் அதிமுக என்பது இமயம் என்றும் கூட்டணி அமைந்தால் அதற்கு இமயமான அதிமுகவே தலைமையேற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் திமுக இரட்டை வேடம் கொண்டிருந்ததை மக்கள் அறிவர் என்றும், பாஜக உட்பட எந்த இயக்கத்துக்கும் அச்சப்படாத கட்சி தான் அதிமுக என்றும், எதற்காக அச்சப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்,.